Home செய்திகள் அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம்..கருணாஸ் எம்எல்ஏ கருத்து

அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம்..கருணாஸ் எம்எல்ஏ கருத்து

by mohan

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவை இன்று14.08.19 மதியம் சந்தித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கருணாஸ் கூறியதாவது: திருவாடானை தனது தொகுதி பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினேன். அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம். தொகுதியில் மணிகண்டன் விரோத போக்கு, செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் முதன்முதலில் வெளிப்படையாக நேரில் புகார் கொடுத்தது நான் தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிடன் இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். அமைச்சர் என்பது ஒரு கெளரவ பதவி தான். ஒரு பிரச்னையை பிற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, பிறகு வெளியிட வேண்டும். ஆனால், அமைச்சராக இருந்த மணிகண்டன் யாரிடமும் கேட்காமல் பேசியதால் பதவியை பறித்து கொடுத்துள்ளார். ஒரு மனிதன் கஷ்டப்படும் போது அந்த வேதனையில் சந்தோஷப்படுவன் நான் இல்லை.. ஒரு பதவி வரும்போது பணிவு வரவேண்டும் அமைச்சர் பதவி நீக்கப்பட்ட உடன் இங்கு உள்ள பொதுமக்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் ஒரு கட்சியில் இருப்பவர்கள் கூட சந்தோஷம் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற விஷயம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது. காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை போல , மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன். குடி மராமத்து பணிகள் என்பது மக்களுக்கான பணி. இந்த பணியில் எந்த அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். யாரேனும் பணம் பெற்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!