விருதுநகர் அருகே முத்துலாபுரத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..1தொழிலாளி பலி நான்கு அறைகள் தரைமட்டம் ..

விருதுநகர் அருகே உள்ள முண்டாலபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை முத்துலாபுரத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலை நாக்பூர் லைசன்ஸ்-யு டன் சுமார் 60க்கு மேற்பட்ட அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 200 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த பட்டாசு ஆலையை தற்போது சிவகாசியை சேர்ந்த கமல் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் ஆலையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று 13.08.19 காலை 5 தொழிலாளர்கள் மட்டும் நேற்று செய்து முடித்த பேன்சி ரக பட்டாசுகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது பட்டாசுகளில் ஊராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 5 அறைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் இந்த விபத்தில் மத்தியசேனை பகுதியை சேர்ந்த மாயழகன் (45) உடல் சிதறி பலியானர். விபத்து நடந்த ஆலைக்கு விரைந்த வந்த தீயணைப்பு விரர்கள் மேலும் தீ பரவாமல் கட்டுபடுத்தினார்கள். மேலும் இந்த குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..