நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தினசரி காய்கறி வியாபாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தினசரி காய்கறி வியாபாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மார்க்கெட்டில் இருந்து வரும் காய்கறி மூடை களுக்கு வரி வசூலிக்க கூடாது எனக் கூறி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு செய்து இருந்தனர். இதனை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் காய்கறி வியாபாரிகள் உடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி ஆகியோர்கள்  முன்னிலை வைத்தார். இதில் திடீரென கூட்டத்தில் இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் சமாதான கூட்டத்தை வருகிற 16.08.2019 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் நிலக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ராமசாமி, வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்..இதன் காரணமாக சற்று பரபரப்பு ஏற்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..