Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை பாரம்பரியத்தின் அடையாளம் “கிரவுன் ஐஸ்க்ரீம்”..

கீழக்கரை பாரம்பரியத்தின் அடையாளம் “கிரவுன் ஐஸ்க்ரீம்”..

by ஆசிரியர்

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய அடையாளம் இருக்கும். உடுத்தும் உடை, உண்ணும் உணவு, பேச்சு வழக்கம், திருவிழா கூடல், சிறப்பு அம்சம் நிறைந்த பொழுது போக்கு என அடுக்கி கொண்டே போகலாம். அதே போல் கீழக்கரையிலும் ஜீம்ஆ பள்ளி என தொடங்கி பல்வேறு பிரத்யேக சிறப்புகள் உண்டு. அதே போல் உணவு வகைகளிலும் கீழக்கரைக்கு என பிரத்யேகமான பல உணவுகளாகிய தொதல், வட்டலப்பம், அடை என பல அடையாளங்கள் உண்டு. இவையெல்லாம் கீழக்கரை மக்களோடு ஒன்றிய விசயமாகும்.

ஆனால் வியாபார ரீதியாக பல வருடங்களாக பிரத்யேக சுவையிலும் தனித்தன்மையிலும் மக்களுக்கு வழங்குவது என்பது இன்றைய நவீன வியாபார உலகில் மிகவும் கடினமான விசயமாகும். அந்த பாரம்பரியத்தை இன்றும் பேணி வரும் ஒரு தொழில் நிறுவனம்தான் 1980ம் ஆண்டு  தொடங்கப்பட்ட “கிரவுன் ஐஸ்”, ஆம் பல வருடங்களுக்கு முன்பு விரல் விட்டு எண்ணக்கூடடிய அளவில் வியாபார நிறுவனங்கள் இருந்த காலத்தில் கீழக்கரை மக்கள் மத்தியில் அதுவும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் குளிர் பான வகைகளுக்கு தனக்கென பெயரை நிலை நிறுத்தி, அப்பெயரையும் சுவையையும் இன்றுவரை பேணி வருகிறார்கள்.

80களில் ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பாெருட்கள் நகரங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்த பொழுது கீழக்கரை மக்களுக்கு ரோஸ் மில்க், பனம்பழம் ஐஸ்க்ரீம், சப்போட்டோ ஐஸ்க்ரீம் நொங்கு பால், பால் ஐஸ், இளநீர் சர்பத், இளநீர் ஜெல்லி என இயற்கையின் குணத்தோடு கீழக்கரை மக்களுக்கு குளர்பானங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் “கிரவுன் ஐஸ்”.

அக்காலம் முதல் இன்று வரை வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு பிறகு அங்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு விற்கப்படும் சீசனில் தேங்காய் பால் கலந்த நொங்கு பால், பசும் பால் கலந்த நொங்கு பால், ரோஸ் மில்க் என குளிர்பானங்களை குடிப்பதற்கு சிறுவர் முதல் பொியவர்கள் வரை “கிரவுன் ஐஸ்”ல் அலைமோதுவதை காண முடியும்.

அன்று தொடங்கிய மக்களின் நம்பிக்கை இன்று எத்தனையோ பொிய பொிய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை கீழக்கரை நகரில் தொடங்கினாலும் இன்று வரை “கிரவுன் ஐஸ்” பொருட்களுக்கென தொடர் வாடிக்கையாளர்ள் இருப்பதே இந்நிறுவனத்தின் கூடுதல் பலம் மற்றும் கீழக்கரையின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது என்றால் மிகையாகாது.

இந்நிறுவனம் பற்றிய மேல் விபரங்களுக்கு சேகு அப்துல் காதர் என்பவரை 98945 06545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!