ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா நேரில் ஆய்வு-பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி 1வது வார்டு பரும்பு நகரில் கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு போதி சேவா சங்கம் சார்பில் தொடர்ந்து 2 ஆண்டு காலமாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது.அந்த வகையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா முயற்சியால் அதிகாரிகள் களத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தை நடை முறை படுத்தி ரூ2,83,000 ஒதுக்கீடு செய்து பாப்பாக்குடி ஒன்றிய நிதியில் கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு முயற்சி எடுத்த நிலையில் கட்டுமான பணி நடைபெறுவதை கள ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பரும்பு நகர் பகுதி மக்களுக்கு 200 மேற்பட்ட வீடுகளுக்கு புதிய வீட்டு குடிநீர் இணைப்பு கிடைப்பதற்கும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொது மக்களின் பல ஆண்டு கோரிக்கையை, ஆலங்குளம் போதி சேவா சங்கம் கடந்த நான்கு கிராமசபை கூட்டத்தில் புதிய இணைப்பு சாலை வேண்டி தீர்மானம் இயற்ற கோரிக்கையாக முன் வைத்தது.இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கு தகுந்த கள ஆய்வினை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..