நிருபருக்கு கொலை மிரட்டல்; அமைச்சருக்கு ஊடக இயக்கம் கண்டனம்..

‘தினக்குரல்’ நாளிதழின் நிருபர் பிரசன்னாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் பழனி திகாம்பரத்தை, சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.இலங்கையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினக்குரலில், ‘இந்திய வீட்டுத் திட்டம், அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா?’ என்ற தலைப்பில் கடந்த 4ம் தேதி கட்டுரை ஒன்று பிரசுரமானது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, ஊடகவியலாளர் க.பிரசன்னா என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும், அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விரிவாக இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த கட்டுரையுடன் தொடர்புடைய மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் அமைச்சரின் இணைச் செயலாளர் நகுலேஸ்வரன் ஆகியோர், நிருபர் பிரசன்னாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதைக் கண்டித்து, இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தினக்குரல்’ பத்திரிகை நிருபர் பிரசன்னாவிற்கு, அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் அவருடைய இணைச் செயலாளரால் விடுக்கப்பட்ட கௌலை மிரட்டல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.அத்துடன் இதை, ஊடகவியளாளர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.ஊடகவியளாளர்கள் தமது கடமையை இடையூறின்றி செய்வதற்கு, நாட்டின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளvது.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..