கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி கயிறு கட்டி மீட்பு..!

திருச்சியில், கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மேலே கொண்டுவந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.தமிழகத்தின் திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா (68). இவரது வீட்டில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. நேற்று (9ம் தேதி) காலை, கிணற்றின் அருகே அமர்ந்து சாந்தா துணி துவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் துணிகளை காயப்போடுவதற்காக கிணற்றின் மீது போடப்பட்டிருந்த பலகை மீது ஏறி நின்றார்.

அப்போது, அவருடைய எடை தாங்காமல் திடீரென பலகை உடைந்தது. இதையடுத்து சாந்தா கிணற்றுக்குள் விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர், கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் பார்த்தனர். அங்கு, சாந்தா இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்தார். உடனே கயிறு கட்டி அவரை மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..