ஆடி வெள்ளியை முன்னிட்டு 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் அம்மன் கோவிலில் நடைபெற்ற மாபெரும் விளக்கு பூஜை

ஆடி மாதம் என்றாலே கோவில்களில் திருவிழாக்களும் சிறப்பு விசேஷங்களும் நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் ஆடி மாதத்தில் மற்றும் ஐந்து வெள்ளிக் கிழமைகள் வருவது கூடுதல் சிறப்பு.ஆடி மாதத்தில் வரக்கூடிய நான்காவது வெள்ளிக்கிழமையான இன்று மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாடக்குளம் கிராமத்தில்  உள்ள கன்மாய் கரையின் தெற்கில் , சுமார் 1500 அடி உயரமுள்ள பசுமலையில் கபாலி ஈஸ்வரி அம்மன் ஆக வீற்றிருந்து அருள் பாலிக்க கூடிய கோவிலில் இன்று மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 508 விளக்கு வழிபாடு நடைபெற்றது .1000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கோவிலின் சிறப்பை பார்த்தோமேயானால்

கபாலீஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ள மலையின் மேல் கோவில் ஸ்தலவிருட்சமாக ஆலமரம் விளங்கிவருகிறது .இம்மரத்தின் அடியில் கோவில் கொண்டுள்ள தவக்கோலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மன் வடிவமே மூர்த்தி ஆகும். லிங்கத்தின் மேல் அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கூடியதால் கபாலீஸ்வரர் என்று பெயர் பெற்றது இந்த அம்மன்இந்த மலையில் உள்ள இரண்டு சுனைகளில் வரக்கூடிய நீரானது தீர்த்தமாக பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.மூர்த்தி ,தலம் ,தீர்த்தம் ஆகிய மூன்றும் இங்கு ஒரே இடத்தில் சிறந்து விளங்குகின்ற காரணத்தால் இத்தலம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாக மாடக்குளம் மக்களால் கருதப்படுகிறது. பாண்டிய மன்னர் காலகட்டத்தில் வெட்டுண்டு இறந்த கோவலனை காண இயலாத கண்ணகி இந்த மலையின் மேல் நின்று கோவலன் வெட்டுண்டு கிடந்த கோவலன் பொட்டலை கண்டதாக ஒரு வரலாறு உண்டு.மலையின் மீது வீற்றிருக்கும் அம்மன் மதுரை மாநகரை பார்த்து இருப்பது போன்ற ஒரு அமைப்பு உடையதாகவும் மேலும் மதுரை மக்களையும் காத்து வருகின்றார் என்று ஒரு நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே இருந்துவருகிறது. இந்த கோவில் குழந்தை வரம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் தோஷம் நீங்க அம்மனை வேண்டியும் குடும்ப விருத்தி வேண்டியும் இதன் மூலம் நினைத்த காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் தொடர்ந்து அம்மனை வேண்டி வருவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.வானம் மும்மாரி மழை பெய்து இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் ஏரி குளங்களில் நீர் நிறைந்து விவசாயம் செழித்து விளங்க வேண்டும் என்றும் அம்மனை வேண்டியதாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.ஒட்டுமொத்த மதுரையின் அழகையும் இந்த மலையில் இருந்து நாம் காணலாம் மதுரையின் மையப்பகுதியில் இருந்து வெறும் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த பசுமலை கபாலீஸ்வரி அம்மன் கோவில்இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை செடிகளும் மரங்களும் நிறைந்த இந்த மலையில் 575 படிகள் ஏறி வந்தாள் அம்மனின் அருள் மட்டுமல்ல நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு புதுவித சக்தி கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..