கமுதி தேவர் கல்லூரியில் சர்வதேச பூர்வகுடிகள் தின கருத்தரங்கு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் சர்வதேச பூர்வகுடிகள் தின சிறப்பு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வே.அருணாசலம் தலைமை வகித்தார். தாவரவியல் துறை தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் போ.பால்பாண்டியன் வரவேற்றார், வரலாற்று துறை தலைவர் கே.ஜெயக்காளை அறிமுகயுரை ஆற்றினார்.

தமிழர் வளர்ச்சி களம் வழக்கறிஞர் கே.அய்யாத்துரைசேதுபதி வாழ்த்துரை வழங்கினர். ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் இன ஆய்வாளர் கே.ராமசாமி சிறப்புரை வழங்கினார். சமூக ஆர்வலர்கள் ராமசந்திரபூபதி, போஸ் ஆகியோர் பேசினர். தமிழர் வளர்ச்சி களம் மாநில நிர்வாகிகள் முத்திருளப்பன், உத்திரச்செல்வன், முருகன், சந்தானதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் பிரின்ஸ் இளம்பரிதி நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..