போஸ் கொடுத்த பெண் முகத்தை கடித்து குதறிய ஆக்டோபஸ்..!

அமெரிக்காவில், போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் ஒன்று கடித்து குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜேமீ பிஸ்செக்லியா. சமீபத்தில் இவர், டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த ஆண் போட்டியாளரின் வலையில் ஆக்டோபஸ் மீன் ஒன்று சிக்கியதை பார்த்தார்.உடனே அவருக்கு, அந்த ஆக்டோபஸுடன் போட்டோ எடுக்க வேண்டும் என ஆசை வந்தது. இதையடுத்து, அந்த நபரிடமிருந்த ஆக்டோபஸை வாங்கி தனது முகத்தின் மீது படரவிட்டு, இரு கைகளையும் விரித்தபடி புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

முதலில், ஆக்டோபஸ் அவருடன் விளையாடுவதுபோல் உணர்ந்தார். எனவே, ஆக்டோபஸை முகத்தில் இருந்து எடுக்காமல் அப்படியே வைத்திருந்தார். அப்போது ஆக்டோபஸ் திடீரென அவரது கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் கடித்து குதறியது.இதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் சொட்டியது. தாங்க முடியாத வலிக்கு மத்தியில் அவர் கடுமையாக போராடி முகத்தில் இருந்து ஆக்டோபஸை பிரித்து எடுத்தார். ஆக்டோபஸ் கடித்ததில் அவருடைய இடது பக்க கன்னம் மற்றும் தொண்டை பகுதி பலமாக வீங்கின. இதற்காக சிகிச்சை பெற்றுவரும் அவர், தன்னைப் போன்று யாரும் ஆக்டோபஸுடன் விபரீத விளையாட்டை மேற்கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image