தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் வைகுண்டராஜா தலைமையில் ஆலங்குளம் TPV மல்டிபிளக்ஸ் திரையரங்கில்  நடைபெற்றதுகூட்டத்தில் நெல்லை மண்டல தலைவர் .சுப்பிரமணியன் பேருரை நிகழ்த்தினார்.

மாநில இணை செயலாளர் .இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் .கணேசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் மாவட்ட தொழில் மையமும் இணைந்து நம் பகுதி இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் முனைவோருக்கு தொழில் பற்றிய கருத்தரங்கு மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் விரைவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது..மேலும் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது சம்பந்தமாக ஆலங்குளம் எங்கு இணைவது என காரசாரமாக விவாதிக்கப்பட்டது..கிளை சங்கங்களின் கருத்துகளை கேட்டபின் எங்கு இணைவது என ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படுகிறது..கூட்ட முடிவில் பொருளாளர் .கலைவாணன் நன்றி கூறினார்..கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர்கள், செயற்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..