விவசாயத்திற்கு அள்ளப்படும் வண்டல் மண் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடுக்க கோரி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம பொதுமக்கள் கொடுத்த புகாரை அடுத்து நேரில் ஆய்வு செய்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குற்றச்சாட்டு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் போவதாகவும் பேட்டி.

தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து கண்மாய்கள் நீர்நிலைகளை தூர்வாரி வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் கண்மாய் விவசாயிகள் அதிகாரிகளின் ஆலோசனைப்படி வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.பொதுவாக வண்டல் மண் எடுப்பதற்கு சனி ஞாயிறு தவிர வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே 10 to 5 மணி வரை மட்டுமே நஞ்சை நிலங்களுக்கு 20 டிராக்டர் என்ற முறையில் அனுமதி வழங்கபட்டுள்ளது

ஆனால் ஒரு சில தனியார் ஒப்பந்தக்காரர்கள் விவசாயத்திற்கு என்று வண்டல் மண்ணை எடுத்து டிப்பர் லாரிகளில் அனுமதி பெறாமல் முறைகேடாக சாலை விரிவாக்கப் பணி மற்றும் மதுரை – தூத்துக்குடி இரு வழி இரயில் பாதை பணிக்காக கனரக வாகனங்களில் எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பானங்குளம், விளாச்சேரி,நிலையூர்,மண்டேலா நகர்,பெருங் குடி உள்ளிட்ட பகுதி களில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியன் உட்பட உயரதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு விவசாயத்திற்கு என்று வண்டல் மண்ணை ஆழமாக அதிகளவில் டிப்பர் லாரி களில் எடுத்து ஒரு சிலர் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயத்துக்கு கிடைக்கவேண்டிய வண்டல் மண் தடுக்கப்படுகிறது மேலும் நிலத்தடி நீர் வள ஆதாரம் பாதிக்கப்படுகிறது.எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண் கிடைக்க வழிவகை செய்யவும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கிராம மக்கள் துணை ஓ பன்னீர்செல்வம் புகார் மனு அளித்தனர்.இந்நிலையில் தகவலறிந்த திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் விளாச்சேரி மானாங்குலம் பெருங்குடி மண்டேலா நகர் நிலையூர் உள்ளிட்ட கண்மாய்களில் நேரில் ஆய்வு செய்தார்.ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன்,

இரு தினங்களுக்கு முன்னர் துணை முதல்வரிடம் இப்பகுதி மக்கள் புகார் ஒன்றை அளித்தனர். அதில் பத்தாயிரத்துக்கு என்று வண்டல் மண்ணை அள்ளி முறைகேடாக பயன்படுத்துகின்றனர் .இதனை நேரில் கண்ட எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வண்டல் மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது ஆனால் வண்டல் மண்ணை விவசாயத்துக்கு அல்லாமல் சாலை விரிவாக்கப் பணி மற்றும் ரயில்வே பணி என்று லாரிகளில் அளிக்கின்றனர் இதனால் மண் வளம் குறைவதோடு மட்டுமல்லாமல் நிலத்தில் நீர் மட்டமும் குறையும் இத்தகைய செயலுக்கு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜன் உடந்தையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது விளாச்சேரி பகுதிகளில் மண் பொம்மை தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது எனவே இதற்கு உடந்தையாக செயல்பட்டு வரும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் மேலும் இது இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவே இப்பிரச்சனையை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முறைகேடாக வண்டல் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் போவதாக தெரிவித்தார்

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..