கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கொச்சின் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது..

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கொச்சின் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது..இதன் காரணமாக விமான நிலையத்தை நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படும் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது..அந்த மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது..இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..குறிப்பாக  மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மிக அதிகன மழைக்கும், வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் உத்தரவிட்டார்.   இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது..

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image