Home செய்திகள் மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி நிலக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பதவியேற்பு.

மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி நிலக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பதவியேற்பு.

by mohan

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது..   அப்போது நிலக்கோட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.. நடந்த தேர்தலில்  நிலக்கோட்டை அதிமுக நகர பொறுப்பாளர் ஜாபர் அலி தலைமையில் அ.தி.மு.க.வினர் போட்டியிட்டனர்.  திமுக சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் தலைமையில் போட்டியிட்டனர்.ஜாபர் அலி தரப்பினரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட வேட்புமனுவில் குறைபாடுகள் இருப்பதாக கூறி மனுவை தேர்தல் அதிகாரி  தள்ளுபடி செய்தார்..

இதனை எதிர்த்து திமுக தரப்பில் கரிகால பாண்டியன்  மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.. இந்நிலையில் அதிமுக தரப்பில் போட்டியிட்ட ஜாபர் அலி காலமானதால் திமுக தரப்பில் இருந்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெற்றனர். மதுரை ஹைகோர்ட் 5 பேர் கொண்ட  குழு பெஞ்ச் நீதிபதி ராஜேஸ்வரன் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பாலசுப்பிரமணியனுக்கு  உடனடியாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த ஜாபர் அலி தரப்பினர் களை அறிவிக்கக்  உத்தரவிட்டார்….தொடர்ந்து அன்றைக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜாஃபர் அலி காலமானதால்  துணைத் தலைவராக போட்டியிட்ட செந்தில்குமாரை தலைவராகத் தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டனர்..  செந்தில்குமார் தலைவராக பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர் யாகப்பன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் உதயகுமார், முன்னாள் நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சேகர், நிலக்கோட்டை வீட்டு வசதி கடன் சங்க தலைவர் நாகராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன்,  ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி , கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பொன்முருகன் டி ஆர் எஸ் செல்வகுமார்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை    தாலுகா   செய்தியாளர் ம. ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!