திருப்புல்லாணி அருகே மேதலோடை முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி விழா ஜூலை 28 ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. இதனையொட்டி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தினமும் இரவு இளையோர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் நடந்தது. ஆக., 6 இரவு ஊரணி கரையில் அம்மன் கரகம் எடுத்து கோயில் வந்தது. அங்கு முளைப்பாரி சுமந்து கோயிலை வலம் வந்தனர். ஆக.,7 காலை அம்மன் கரகம் பக்தர்கள் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்றும், மாவிளக்கிட்டு வழிபட்டனர்.

துரைச்சாமி தலைமையில் வாலிபர்களின் கிராமிய ஒயிலாட்டம், பெண்கள் கும்மியாட்டம் நடந்தன. கோயில் முன் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரிகள் அம்மன் கரகத்துடன் ஊர்வலம் சென்று ஊரணி கரையில் கரைத்தனர். கிராமத்தலைவர் நவநீதன் தலைமையில் கோயில் கமிட்டி, விழா குழுவினர் முளைப்பாரி விழா ஏற்பாடுகளை செய்தனர். இவ்விழாவில்சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..