Home செய்திகள் பெண்களை குறிவைத்து நகைகொள்ளையில் ஈடுபடும் கொடூர கொள்ளையர்கள்.பள்ளி மாணவர்களையும் கொள்ளையில் ஈடுபடுத்தியதாக தகவல்.

பெண்களை குறிவைத்து நகைகொள்ளையில் ஈடுபடும் கொடூர கொள்ளையர்கள்.பள்ளி மாணவர்களையும் கொள்ளையில் ஈடுபடுத்தியதாக தகவல்.

by mohan

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, திருமங்கலம் , செக்கானூரணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக செல்லும் பெண்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியைகள் , கோவில் திருவிழாவிற்கு செல்லும் பெண்கள் ஆகியோரிடம் தொடர்ந்து வழிப்பறி நகை கொள்ளை நடைபெறுவதாக புகார்கள் வந்தன..இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று மதுரை கருமாத்தூரில் உள்ள கோவில் ஒன்றில் சாமி கும்பிடுவதற்காக பவுன் என்ற பெண் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் திருமங்கலம் சிந்துபட்டி அருகேயுள்ள அழகுசிறை என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் இரு நபர்கள் பின்னால் அமர்ந்திருந்த பெண் அணிந்திருந்த 10பவுன் தாலி சங்கிலியை கழுத்தில் இருந்து பறித்தபோது அந்த பெண் செயினை கெட்டியாக பிடித்துகொண்டதால் வாகனத்தில் இருந்த கணவன் – மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த நிலையிலும் விடாத கொடூர கொள்ளையர்கள் சாலையில் பெண்ணை இழுத்தவாறே சென்றுள்ளனர். அதில் தாலி செயினின் ஒரு பகுதியான 5பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். காலையில் இழுத்து சென்றதில் பெண்ணிற்கு தோல் கை கால்களில் சதைகள் பெயர்ந்து கொடுரமான காயம் ஏற்பட்டதோடு வாகனத்தை ஓட்டிவந்த கணவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியநிலையில் வழிப்பறி நடைபெற்ற நேரத்தில் அந்த சாலையில் சென்ற இரு சக்கர வாகனமானது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தநாளே மதுரை செக்கானூரணி ரயில்வே கிராசிங் பகுதியிலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் அணிந்திருந்த நகையை பறித்துசெல்லும் சம்பவம் நடந்துள்ளது இது குறித்தும் செக்கானூரணி போலிசார் வழக்குபதிவு செய்த நிலையில் தொடர் வழிப்பறை கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்படடு நடத்திய விசாரணையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது மதுரை பசுக்காரன்பட்டியை சேர்ந்த கார்த்திக், செல்லபாண்டி ஆகிய இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் , செல்லபாண்டி ஆகியோர் ஆடுகளை திருடி விற்பனை செய்ததாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் மற்றும் செல்லபாண்டி அளித்த வாக்குமூலத்தில் தாங்கள் இருவரும் ஆடுகளை திருடி விற்றுவந்த நிலையில் போதிய பணம் கிடைக்காததால் ஒரு கும்பலை உருவாக்கி பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்ய முடிவு செய்தோம் இதற்காக பள்ளி மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 4பேரை உடன் இணைத்து 6பேர் கொண்ட கும்பலாக செயல்பட்டோம் என்பதாகவும், பள்ளி மாணவர்கள் இருவரும் அந்தந்த துறைகளில் உள்ள பெண்கள் அணிந்துள்ந நகைகள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்ததாகவும், மற்ற இருவர் எந்த சாலை வழியாக செல்வார்கள் எந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கும் என தகவல் தெரிவிப்பார்கள் இதனையடுத்து நாங்கள் இருவரும் வழிப்பறி செய்வோம் எனவும் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நகையை பறிக்கும் போது ஏராளமான பெண்களை இழுத்துகீழே தள்ளிவிட்டுள்ளோம் எனவும், அவர்களுக்கு என்ன ஆனாலும் அதைப்பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் நகையை பிடுங்கி செல்வது மட்டுமே நோக்கம் எனவும் செத்தாலும் கண்டுகொள்ளகூடாது என்ற மனநிலையில் இருப்போம் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதுவரை 14 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சில நேரங்களில் கவரிங் நகைகள் என தெரியாமலே வழிப்பறி செய்தபோது பெண்கள் கீழே விழுந்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிந்துபட்டி அழகுசிறை பகுதியில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளை நடைபெற்றபோது காயமடைந்த பெண்ணின் புகைப்படங்கள் மனதை கலங்கடிக்க செயகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6பேரையும் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்த நிலையில் பாத்ரூமில் வழுக்கிவிழும் சிறப்பு கவனிப்பு நடக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நகை அணிந்து செல்லும் பெண்கள் தங்களை யாரும் பின்தொடர்கிறார்களா என கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், சந்தேகபடும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!