வேகத்தடை பாதுகாக்க அல்ல மனிதர்களை பலி வாங்கிட… துணை முதல்வா் தொகுதியின் அவலநிலை…

தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தடுக்க வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சமீபத்தில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகுளம் முதல் தேனி வரையுள்ள சாலையில் தேனி நகருக்கு வரவேண்டும் என்றால் சுமார் 17 மலைபோல் இருக்கும் வேகத் தடைகளைத் தாண்டித்தான் வரவேண்டும். பெரியகுளத்தை கடந்தவுடன் அன்னஞ்சி விலக்கு வரை 17 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வேகத்தடையின் அருகில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.

அதன் அருகே மின்வளக்கு வசதியும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாததால் விபத்தில் சிக்கி காயமடைந்தும், உயிர்பலிகளும் ஏற்பட்டிருக்கிறது.மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமான சாலையில் எவ்வாறு இத்தனை வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.துணை முதல்வாின் தொகுதி என நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியில் பல்வேறு சுற்றுலாத்தளங்கள் உள்ள பொியகுளம் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது பல முக்கிய பிரமுகா்கள் வந்து செல்லும் தொகுதியில் அடுத்தடுத்து வேகதத்தடைகள் அமைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..