கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்திய தலைமை போலீஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை போலீஸ் அதிகாரியாக, ஹால்டன் பிராந்தியத்தில் டெபுடி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பாவை, நியமித்துள்ளனர். போலீஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்துள்ள நிஷான் துரையப்பா, அக்டோபர் 1 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் இலங்கை தமிழர்.’3000 காவலர்களை கொண்டுள்ள பீல் பிராந்திய போலீஸுக்கு தலைமை அதிகாரியாக பணியாற்றுவது உண்மையிலேயே பெருமையான விஷயம். சிறப்பாக கடமையாற்று வேன்’’ என்று தெரிவித்துள்ளார் நிஷான்.  அவரை பீல் நகரத்துக்குட்பட்ட மிஸிஸிசவ்ஹா மேயர், போன்னி கிரோம்பி வரவேற்றுள்ளார். நகரத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள இணைந்து செயலாற் றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.நிஷான், யாழ்பாண முன்னாள் மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் பேரன் என்பதும் மூன்று வயதில் பெற்றோருடன் கனடா வில் குடியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..