Home செய்திகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் பேட்டி

by mohan

தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கூலிப்படைகள் கை ஓங்கி உள்ளதாகவும் , வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றி எழுதிவைக்கப்பட்ட ஒன்று என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் தெரிவித்துள்ளார்..மேலும் மத்திய அரசு தற்போது நிறைவேற்றி வரும் சட்டங்களால் இந்தியா அபாயகரமான சூழ்நிலைக்கு செல்லும் எனவும் கூறியுள்ளார்..நெல்லையில் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய சட்டங்கள் , காஷ்மீரில் குவிக்கப்பட்டு வரும் ராணுவம் ஆகியவற்றைப் பார்க்கும் போது அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் நாடு சிதருண்டுவிடுமோ என்ற எண்ணம் வந்துள்ளது..அதோடு மட்டும் அல்ல தற்போது இயற்றப்பட்டு வரும் சட்டங்களால் நாடு அபாயகரமான சூழ்நிலையை நோக்கி செல்லும். இந்திய ரெயில்வே துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட சேவை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை தன்னிச்சையாக அறிவக்கப்பட்டுள்ளது..இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் –ன் குலக்கல்வி முறையை மறைமுகமாக பாரதிய ஜனதா அரசு திணிக்க நினைக்கிறது. காஷ்மீர் பிரச்சனை தேசிய அளவிலான பிரச்சனை, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசாமல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் ராணுவம் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை, இதனால் பதட்டம் அச்சம் ஏற்பட்டுள்ளது..நீட் தோ்வு காரணமாக அனிதா முதல் நெல்லை தனலட்சுமி வரை இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீட் தேர்வை ஆதரிக்கிறதா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் , மாணவிகளின் உயிரிழப்பிற்கு பொறுப்பேற்று எடப்பாடி அரசு பதவி விலகவேண்டும் .

மேலும் பல காரணங்களை சொல்லி தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாடு அல்லாமல் மத்திய அரசு அளித்த பல கோடி ரூபாய் செலவழிக்கப்படாமல் நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதை மத்திய அரசின் சிஏஜி அறிக்கை உறுதிசெய்துள்ளதுஇது திறமையற்ற நிர்வாக திறன் கொண்ட அரசைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்..மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் கொலை கொள்ளை என நாளுக்குநாள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கூலிப்படைகளின் கை ஒங்கியுள்ளது, தமிழக மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த முறை வேலூர் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக விரோதமானது.குடியாத்தம் தொகுதியில் வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் திருடுபோயிருப்பது திட்டமிட்ட செயல்..ஏதோ ஒன்று செய்து வெற்றியை பெற நினைக்கிறார்கள். வேலூர் தேர்தல் வெற்றி திமுக கூட்டணிக்கு எழுதிவைக்கப்பட்ட ஒன்று ..அடுத்தமாதம் 14,15,16 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு கூட்டம் கட்சி தலைவர் டி.ராஜா தலைமையில் நடைபெறுகிறது..இந்திய மாதர் சங்க மாநில மாநாடு அக்டோபர் மாதம் 2,3,4 ஆகிய நாட்களில் நெல்லையில் நடைபெறுகிறது. இதில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்திய மாதர் சங்க செயலாளர் ஆனிராஜா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்..மிகவும் வறட்சியான சூழலில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என கூறினார் .

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!