பெரியகுளம் அருகே கல்லூரியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான “மேரி மாதா “கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B Com இரண்டாம் ஆண்டு பயின்று வரும் கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரை சேர்ந்த சைஜு (19) என்ற மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி விடுதிக்குள் கஞ்சா (போதை வஸ்து) பயன்படுத்தியதாக கல்லூரிநிர்வாகம்சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுதிக்குள் கஞ்சா பயன்படுத்தியதை தொடர்ந்து சைஜு வின் பெற்றோருக்கு தகவல் கொடுப்பதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் மிரட்டியதால் மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை. கொண்டார்.

தகவல் அறிந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் மாணவர் சை ஜு வின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..இந்நிலையில் மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனது சாவுக்கு காரணம் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் தான் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்த கடிதமும் போலிசாரிடம் சிக்கியுள்ளது. மாணவனின் சாவுக்கு காரணமான கல்லூரி பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவன் சாவுக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், மாணவரின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் மாணவனின் உடலை வாங்க மறுத்து மாணவர் அமைப்பு சார்பில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் நடைபெற்றது. சுமார் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பெரியகுளம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்..உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

.சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..