தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை

கோவையில் சிறுவன் மற்றும் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. இதை தேமுதிக பாராட்டி வரவேற்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு.
இவ்வாறு கூறியுள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..