கீழக்கரை, தொண்டியில் நாளை 04.08.19 புயல் மற்றும் வெள்ளம் மாதிரி ஒத்திகை .மக்கள் அஞ்ச வேண்டாம் .. மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழகம் மற்றும் பிற கடலோர மாநிலங்களில் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிகை விவரங்கள் குறித்து ஐதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. தேசிய பேரிடர் மேலாண் ஆணையம், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாதிரி பயிற்சியை நாளை (ஆக.4) நடத்துகிறது. இப்பயிற்சி முன்னோட்டமாக வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் தலைமையில் காணொளி காட்சியில் ஆலோசனை கூட்டம் இன்று (ஆக.3) நடந்தது. இதில் நாளை (ஆக.4) நடைபெறவுள்ள புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகையை மேற்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

புயல் மற்றும் வெள்ளம் வரும் பட்சத்தில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் புயல் மற்றும் வெள்ளம் எச்சரிக்கை முன்னறிவிப்பு பெறப்படும்போது, பாதிக்கக் கூடிய மக்களுக்கு அத்தகைய பரிமாற்றமானது அரசு துறைகள் மூலம் எவ்வாறு சென்றடைகிறது என்பதை நாளை (ஆக.4) நடைபெறும் ஒத்திகை மூலம் பரிசோதிக்கப்படும். இம்மாதிரி ஒத்திகையானது திருவாடானை தாலுகா தொண்டி, கீழக்கரை தாலுகா கல்பார் ஆகிய இடங்களில் நாளை (ஆக 4) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இது ஒத்திகை என்பதால் பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..