மதுரை மாநகர காவல்துறை சார்பாக குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

மதுரை மாநகர காவல்துறை சார்பாக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை விருந்தினர் மாளிகையிலிருந்து மதுரை மாவட்ட அமர்வு மகளிர் நீதிமன்ற நீதிபதி புளோரா  கொடியசைத்து துவக்கிவைத்தார். இப்பேரணி அவுட்போஸ்ட் வழியாக பெரியார் சிலை, மேலூர் மெயின்ரோடு, ராஜா முத்தையா மன்றம், Dr.தங்கராஜ் சாலை, வழியாக காந்தி அருங்காட்சியகத்தில் முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,., காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) சசிமோகன், காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுகுமார் , தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) அசோகன், அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் (சட்டம் & ஒழுங்கு)லில்லி கிரேஸ், தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்.ரவிச்சந்திரன், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் (ச&ஒ) . மலைச்சாமி, அண்ணாநகர் காவல் ஆய்வாளர் (ச&ஒ) பெத்துராஜ் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் மேலும் 600 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் மதுரை மாநகரில் திலகர் திடல் சரகத்தில் சிம்மக்கல் புறக்காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையர் (குற்றம்) செந்தில்குமார் ., தலைமையில் இப்பேரணி சேதுபதி பள்ளி, மீனாட்சி பஜார், வழியாக ரயில்வே நிலையத்தில் முடிவுற்றது. மற்றும் திருப்பரங்குன்றம் காவல் சரகத்தில் வில்லாபுரம் தோரண வாயிலில் காவல் கூடுதல் துணை ஆணையர் .ஜானகிராம்  தலைமையில் இப்பேரணி அவனியாபுரம் பெரியார் சிலையில் முடிவுற்றது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..