உச்சிப்புளியில் நீடித்த நிலைத்த கிராம ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம் . வடகாடு கிராமத்திற்கு பரிசு

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை திட்டத்தை உறுதிப்படுத்தும் ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம் உச்சிப்புளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமலினி தலைமை வகித்தார். கிராமலயா நிர்வாக இயக்குநர் இளங்கோவன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன் (கிராம ஊராட்சி), சண்முகநாதன் (வட்டார ஊராட்சி), வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பாலாம்பிகை, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். திட்ட மேலாளர் சம்பத் ராஜ், திட்ட ஆலோசகர் லோகநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு, தொழில்நுட்ப அலுவலர்கள் பவுல் அந்தோணி ராஜ், யுவ ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாக இயக்குநர் இளங்கோவன் கூறியதாவது: கிராமாலயா தொண்டு நிறுவனம் நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் 3 ஆண்டுகளுக்கு குடிநீர், சுகாதார நலக் குழு அமைத்து அதன் மூலம் 4 ஆயிரம் தனிநபர் இல்ல கழிப்பறைகள் மராமத்து செய்து கொடுத்தல், 55 பள்ளி கழிப்பறைகள், 10 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் மராமத்து செய்தல், அங்கன்வாடி மைய கழிப்பறைகள் மராமத்து செய்து கொடுத்தல் பணிகளை நிறைவேற்ற திட்டமிட்டு தற்போது 1,271 தனி நபர் கழிப்பறைகள், 10 பள்ளி கழிப்பறைகள், 5 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், 10 அங்கன்வாடி மைய கழிப்பறைகள் மராமத்து செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஓராண்டிற்கு 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து அக்கிராமங்களில் கழிப்பறை மராமத்து செய்தல், மாதவிடாய் காலங்களில் பெண்கள் பிளாஸ்டிக் நாப்கின் பயன்படுத்துவதை தடுத்து கிராமாலயா தயாரித்த எளிதில் மக்கக்கூடிய திரும்ப, திரும்ப துவைத்து பயன்படுத்தக்கூடிய பருத்தி துணியணை ஆடை பயன்படுத்தும் வகையில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை பயன்பாட்டை உறுதி செய்தல்100 சதவீதம் கழிப்பறை வசதி உருவாக்குதல், 100 சதவீதம் குடும்பத்தில் உள்ள அனைவரும் கழிப்பறை பயன்படுத்த வைத்தல், 100 சதவீதம் அனைவரையும் சுகாதார பழக்க வழக்கங்கள் கடைபிடித்தல், 100 சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தலை தடுத்து நிறுத்தல், 100 சதவீதம் மாதவிடாய் காலத்தில் பெண்களை துணியணை ஆடை பயன்படுத்த வைத்தல், இந்நிபந்தனைகளை கிராமங்களில் கடைபிடிக்க செய்து நீடித்த நிலைத்த கிராமங்களாக உருவாக்குவதே நோக்கம். மண்டபம் ஒன்றியத்தில் நீடித்த நிலைத்த முன் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்ட 10 கிராமங்களில் தங்கச்சிமடம் ஊராட்சி வடகாடு கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..