செம்படையார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மிகவும் ஏழ்மையில் உள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட்டுஅவர்களின் வாழ்வாதாரத்திற்காக வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் நடப்பாண்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், 2020 ஜனவரி மாதங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி மண்டபம் வட்டாரம் செம்படையார்குளம் ஊராட்சியில் கறவை மாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா முன்னிலை வகித்தார். பயனாளிகள் தேர்வு குறித்து கால்நடை மருத்துவர் முகமது நிஜாமுதீன் விளக்கம் அளித்தார். பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் கண்ணன் செய்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..