நிலையூர் பெரிய கண்மாயிற்கு வரும் அாிய வகை பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக ஆா்வலா்கள் கோாிக்கை.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் பெரிய கண்மாய். சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் தற்போது மிகக்குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு முகாமிட்டுள்ளன.

குறிப்பாக அரிய வகை நீர் பறவைகளான பூ நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இங்கு மீன்கள் அதிகளவில் இருப்பதாலும் அதை உண்பதற்காக நீர் வாழ் பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. எனவே இங்கு வரும் அரிய வகை பறவைகள் கன்னி வைத்து வேட்டையாடப்படுவதோடு மீன்களை காப்பதற்காக இந்த கண்மாய்க்குள் சிலர் வெடி வைத்து பறவைகளை விரட்டுகின்றனர். அப்போது அதிர்ச்சியில் சில பறவைகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இங்கு வரும் அரிய வகை பறவைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..