கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கோவை ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் குழந்தைகள் முஸ்கின், ரித்திக். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்  கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஒரு தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறுவன், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..