முதியோர் காப்பகம் என்ற பெயரில் பாதிப்புக்குள்ளான மூன்று பெண்கள் -திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜ் மற்றும் மத்திய சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தின் வாயிலாக மீட்பு

திருப்பரங்குன்றம் அருகே மதுரை நிலையூர் திருப்பதி நகரில் கடந்த 7 மாதங்களாக முதியோர் காப்பகம் என்ற பெயரில் ,  வீட்டை வாடகைக்கு எடுத்து மூன்று மனவளம் குன்றிய முதியவர்களை தினமும் வீட்டின் உள்ளே அடைத்து வைத்தும்,  அடித்து சித்திரவதை செய்தும் வருவதாகவும், உணவும் வழங்கப்படாமல் பட்டினி போட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் மதுரை வட்டாச்சியர்  நாகராஜ் மற்றும் காவல்துறையினர்கள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து காப்பகத்தின் உரிமையாளர் ஸ்டீபன்ராஜ், மற்றும் மேலாளர் ஷீலா ,  மூவரையும் சித்திரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட மன வளம் குன்றிய முதியவர்களான தமிழ்ச்செல்வி (புதுக்கோட்டை), குர்ஷித் ஆசானா (யாகப்பா நகர்), செல்வி (துரைசாமி நகர்) ஆகிய மூவரையும் அவர்களை அவர்களது உறவினர்களால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த காப்பகத்திற்க்கு விட்டு சென்றனர்களாம். மேலும் இதற்கு முன்னதாக மதுரை பெருங்குடி பகுதியில் நடத்தப்பட்டதாகவும், தற்போது 7 மாதங்களுக்கு முன்னதாக நிலையூர் திருப்பதி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து காப்பகம் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.இதனைதொடர்ந்து பகல் முழுவதும் வீட்டின் முன் கதவு பூட்டப்பட்டும், இரவு நேரங்களில் அடித்து சித்திரவதை செய்தும் வருவதாகவும், உணவும் வழங்கப்படாமால் பட்டினி போட்டு வந்துள்ளதை அக்கம்பக்கத்தினர்ருக்கு தகவல் கொடுத்து இருந்து வந்துள்ளாா்கள்.

இந்நிலையில், இந்த காப்பகத்தில் நள்ளிரவில் பெண்களும் ஆண்களும் தங்கி உல்லாசமாக இருந்து விட்டு செல்ல காப்பக உரிமையாளர் / இந்த காப்பகத்தை பயன்படுத்தி வருகிறார் என புகார் தெரிவித்தனர்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட 3 – வரையும் மத்திய சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாக அலுவலர் பிரேமலதா மற்றும் வழக்குப் பணியாளர் விக்னேஷ்வரி அழைத்துச் சென்று, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் முதியவர்களை கவனிக்காமல் கொடுமைப்படுத்தியதாக சமூகநலத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளிடம் ஷீலா மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகர் பேசியதாவது;

எந்த ஒரு அங்கீகாரமும் பெறாமல் முதியோர் காப்பகம் என்ற பெயரில் சீலா என்பவரால் பாதிப்புக்குள்ளான சித்திரவதைகளுக்கு உள்ளான மூவரையும் தற்போது காவல்துறையினரின் உதவியைக் கொண்டு மீட்டுள்ளோம்…தொடர்ந்து அவர்களை அவரவர் உறவினர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கான முறையான ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது..பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உறுதியாகும் பட்சத்தில் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து மத்திய சமூக நல துறை பிரேமலதா கூறும்போது;

இது போன்ற முறையற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத காப்பகங்களில்   அவர்களுக்கு நிகழும் இன்னல்களில் இருந்து காத்து அவர்களை பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை உறுதி செய்ய முனைப்பு காட்டுவோம்.இங்கிருக்கும் பெண்கள் துன்புறுத்தப்பட்டு இருக்கின்றனர்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் இடத்தில் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இல்லாத பட்சத்தில் அவர்களை அங்கேயே அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்று கூறினார்.மேலும் மத்திய அரசு சார்பில் பெண்களுக்கு நடக்கும் இன்னல்களை உடனுக்குடன் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 181 தொடர்புகொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..