தூய்மை இந்தியா திட்ட குப்பை தொட்டியே குப்பையில் கிடக்கும் அவலநிலை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்த குத்தப்பாஞ்சான் ஊராட்சி 1வார்டு பகுதி பரும்பு நகர் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இப்பகுதியில் தூய்மை இந்தியா திட்ட குப்பை தொட்டியே குப்பையில் கிடக்கும் அவலநிலை உள்ளது.

துப்புரவு செய்யும் பணியாளர்களை காளாத்திமடம் வார்டு பகுதிக்கு மட்டுமே தினமும் தூய்மை பணிக்கு பயன்படுத்தி வருவதாகவும், பரும்பு நகர் பகுதியில் தூய்மை பணி நகைபெறவில்லை என்பதாகவும் பொதுமக்கள் குற்றம சாட்டுகின்றனர்.மேலும் இங்கு குப்பை, அசுத்தகழிவுகளை அங்கன்வாடி அருகே மற்றும் திறக்கப்படாத புதிய பெண் சுகாதார வளாகம் அருகே மலை போல் கழிவுகளை கொட்டி தீவைக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது.இதனால் அங்கன்வாடியில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு நச்சு புகையால் மூச்சு திணறல், சுவாச கோளாறு ஏற்படுகிறது.இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.தினமும் துப்புரவு பணியாளர்களை பரும்பு நகர் வார்டு பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ள உரிய நடவடிக்கை குத்தப்பாஞ்சான் ஊராட்சி நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என்பதாகவும் இவ்வார்டு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..