Home ஆன்மீகம் புராதன சிறப்புமிக்க கஞ்சமலை சித்தேசுவர சுவாமி திருக்கோவில்

புராதன சிறப்புமிக்க கஞ்சமலை சித்தேசுவர சுவாமி திருக்கோவில்

by mohan

சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதுது சித்தேஸ்வர சுவாமி திருக்கோவில், இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவிலானது அமாவாசை கோவில் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. கனிம வளம் மிகுந்த கஞ்சமலையில் இரும்புத் தாதுவை கொண்டு மாவீரர் அலெக்ஸாண்டருக்கு, போரஸ் மன்னன் பரிசளித்த வாள் இக்கஞ்சமலை இரும்பினால் செய்யப்பெற்றது.இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் நிறைந்துள்ளன.

அதனால் கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் பக்தர்கள் குளித்து விட்டு, நீரை பருகி வந்தால் பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது முன்னோர்கள் சான்று. கோவில் பின்புறம் காந்த தீர்த்தகுளம் உள்ளது.இந்த காந்த தீர்த்தக்குளத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.உடலில் பருக்கள் உள்ளோர் கஞ்சமலை சித்தரை தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்து, மூன்று அமாவாசைக்கு தரிசிக்க வருவதாக வேண்டிக்கொண்டால் மறைந்து விடுகின்றன.பின்னர் இத்திருத்தலத்திற்கு வந்து நீராடி விட்டு உப்பு, மிளகு, வெல்லம் வாங்கி காந்த தீர்த்த குளத்தில் இட்டு சித்தரை வழிபட்டு செல்கின்றனர்.

அவ்வைக்கு அதியமான் அளித்த கரு நெல்லிக்கனி விளைந்த இடமும், பொன் விளைந்த இடமும், சஞ்சீவி மற்றும் மருத்துவ குணங்கள் மிகுந்த மூலிகைகள் நிறைந்து உள்ளன.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 2ம் வாரம் செவ்வாய் கிழமையிலிருந்து, சித்தர் சிறப்பு பெரு விழா நடைபெறும்.இக் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இரும்புத்தாது, மூலிகை செடிகள், புனித நீர் ஊற்றும் இருப்பதால் இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள்   அதில் நீராடி  நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

சேலம், ரகுபதி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!