Home செய்திகள் ஓய்வு பெறும் ஐ.பி.எஸ்.அதிகாரி ஜாங்கிட், உருக்கமான கடிதம்

ஓய்வு பெறும் ஐ.பி.எஸ்.அதிகாரி ஜாங்கிட், உருக்கமான கடிதம்

by mohan

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், ஜாங்கிட், 60. ஐ.பி.எஸ்., அதிகாரியாக, 1985ல் தேர்வு பெற்று, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஏ.எஸ்.பி.,யாக பணி அமர்த்தப்பட்டார். வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, உ.பி., மாநில பவாரியா கொள்ளை கும்பலை இவர் ஒழித்தார். சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், ‘பங்க்’ குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுன்டர் செய்தார். தற்போது, டி.ஜி.பி., ரேங்கில், கும்பகோணம், போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், இன்று (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார்.அவா் தம்முடன் பணியாற்றியவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளாா்.அதன் விபரம் வருமாறு –

அன்புடையீர். வணக்கம்

இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். இந்த காலகட்டத்தில் என்னுடன் பணியாற்றிய காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஏற்பட்ட ஜாதி மோதலை கட்டுப்படுத்தியது, பவாரியா கும்பலை கண்டுபிடித்தது மற்றும் வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளின் மீதான நடவடிக்கையின் போதும் மிக முக்கியமான காலகட்டங்களில் கடுமையான சிரமங்களுக்கிடையிலும் என்னுடன் அனைவரும் இணைந்து பணியாற்றியதை நான் என்றும் மறவேன். என்னுடைய 34 ஆண்டு கால சிறப்பான பணிக்கு என்னுடன் இரவு பகலாக ஒத்துழைத்த, நீங்கள் அனைவரும் தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் ஓய்வு பெறுகின்ற இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் அன்புள்ள, எஸ். ஆர். ஜாங்கிட் , ஐபிஎஸ்.                                                       இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுளளது.

ஜெ.அஸ்கர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!