தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம்.மதுரை மாநகர காவல்துறையின் அறிவிப்பு

வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மதுரை மாநகர காவல் அலுவலத்தில் 30.08.2019 அன்று பகல் 01.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். . 1. விண்ணப்ப மனுவில் ரூ.2/- நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன்

2. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் – AE – 5 (விதி 113 வெடி பொருட்கள் சட்டம் 2008).. 3. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் புகைப்படம் 2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்).. 4. தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று. (நடப்பாண்டு 2019-2020). 5. உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம்.

6. உத்தேசிக்கப்பட்ட கடை அமையவுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம்.. 7. உத்தேசிக்கப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் சம்மதக் கடிதம். (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலுடன்).. 8. மாநகராட்சி சொத்துவரி ரசீது. (நடப்பாண்டு 2019-2020). 9. மாநகராட்சி D & O உரிமம் ரசீது. (Trade Receipt) (நடப்பாண்டு 2019-2020). 10. ஏற்பு உறுதி ஆவணம் (Sworn Affidavit) ( ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்).. 11. கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம் (Photo) இரண்டு கோணங்களில்.. 12. விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்.. 13. ரூ.900/- விண்ணப்ப /உரிமம் கட்டணம் (திருப்பித்தர இயலாது).. 14. அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.. முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும். மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீடிப்பு செய்யப்படமாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத எவ்வித மனுவும் முன்னறிவிப்பின்றி தள்ளுபடி செய்யப்படும்..இவ்வாறு அக்குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..