மக்கள் பாதை சார்பாக ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் கிராமசபையில் பொதுமக்களை திரட்டி கேள்வி எழுப்ப திட்டம்..

இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குலசேகரக்கால் கிராமத்தில் உள்ள விளை நிலங்கள் இங்குள்ள கண்மாய் நீரை மட்டுமே நம்பி உள்ளன. கண்மாய் பல வருடங்களாக தொடர்ந்து தூர்வாரப்படாமல் உள்ளதுடன் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மர புதர்களாக மாறியுள்ளது . மேலும் தண்ணீர் வரும் காலங்களில் உபரி நீர் செல்ல அமைக்கப்பட்ட நீர் வழித்தடம் முற்றிலும் சேதமாகி தடம் மறைந்து உள்ளது .இந்நிலையில் இக்கண்மாயை நம்பி இருந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்ய வழியின்றி உள்ளனர். குளத்தில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதளத்திற்கு சென்று விட்டது .பல இடங்களில் நீர் உப்பு தண்ணீராகி விட்டது இந்த நிலையில் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டம் 2019_2020 (குளம் தூர்வாரும் பணி) தமிழ் நாடு முழுவதும் இந்த ஆண்டு 1829 குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு 499.68 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் மதுரை மண்டலத்தின் கீழ் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 681 குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு 230 கோடி ஒதுக்கீடு சய்தும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 69 குளங்கள் தூர்வார 38.21 கோடி ஒதுக்கீடு செய்தும் இந்த குளம் பல வருடங்களாக தூர்வாரப்படாத இந்த குளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டு அம்மாரி மற்றும் குலசெகரக்கால் கிராம விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் அவர்களின் தலைமையில் ஆகஸ்ட் 15 அன்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களை திரட்டி கேள்விகளை எழுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..