ஆடி அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் இந்துக்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தை, ஆடி, மஹாளாய அமாவாசை போன்ற நாட்களில் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் மறைந்த முன்னோர் பாவ விமோசனம் அடைவர் என்பது ஐதீகம்.இந்நிலையில் ஆடி அமாவாசை, நாளான இன்று மறைந்த முன்னோருக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்த, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து பல்லாயிரணக்கான பக்தர்கள் நேற்று மாலையில் இருந்து இராமேஸ்வரத்தில் குவியத் தொடங்கினர்.

அக்னி தீர்த்தக்கரையில் இன்று அதிகாலையில் முன்னோருக்கு தர்பணம், திதி, பிதுர் கர்மா பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், ராமர் அக்னி தீர்த்தகரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையடுத்து கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடிய பின்னர், சுவாமி தரிசனம் செய்தனர்.ஆடி அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சீருடையில் ஆயிரம் போலீசார், தனி சீருடையில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் அரசு மருத்துவர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..