துபாயிலிருந்து சார்ஜாவுக்கு கடல் வழி பயணம் RTA தொடங்கியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் பல புதுமைகளை புகுத்துவதில் எப்போதும் முன்னோடி.  இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஷார்ஜா பகுதியில் இருந்து துபாய் பகுதிக்கு கடல் வழி போக்குவரத்தை தொடங்கியுள்ளனர்.  இதன் மூலம் சாலை பயணத்தில் நேரம் வீணாவதில் இருந்து பொதுமக்கள் காக்கப்பட்டுள்ளார்கள்.

இது துபாய் Al Ghubaiba Marine நிலையத்திலிருந்து ஷார்ஜாவில் உள்ள Aquarium Marine நிலையத்துக்குச் இந்த போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது.  இச்சேவை  தினசரி 42 முறை இயக்கப்படும் என்று தெரிவித்ததோடு, மக்களின் ஆதரவை பொறுத்து மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளன.

இதில் பயணிக்கும் பயனாளிகளுக்கு சில்வர் மற்றும் கோல்ட் அட்டை என இரு விதமாகப் பிரித்துள்ளனர் சில்வர் AED15 கோல்ட் அட்டைக்கு AED25 என தெரிவித்துள்ளனர் ஐந்து வயதுக்கு உட்பட்டவர் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது துபாயில் இருந்து காலை 5.15 க்கும் இரவு 8 மணி வரைக்கும் இயக்கப்படும் அதே ஷார்ஜாவில் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 7.30 இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

காலையில் 5 மணி முதல் 9 மணி வரை மாலை 4 முதல் 8 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு இயக்கப்படும். “இதில் இலவசமாக வைஃபை சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..