Home செய்திகள் தஞ்சையில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் காவலர்கள் மாநாடு

தஞ்சையில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் காவலர்கள் மாநாடு

by mohan

தமிழ்த் தாய் அறக்கட்டளை சார்பில் மொழிக் காவலர்கள் மாநாடு தஞ்சாவூரில் 27.07.2019 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார்.மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் அன்புச் செழியன், முன்னாள் இயக்குநர் சேகர், நெல்லை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் இராஜேந்திரன்,புதுவை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முத்து உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் விஜயராகவன் மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் “தமிழ் அமைப்புகள் ஜனவரி 25-ஆம் நாளில் தாய்மொழித் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்”என கேட்டுக் கொண்டார்.தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்து வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து மொழிக் காவலர்கள் விருதுகளை வழங்கினார்.அந்த வகையில் நெல்லையில் செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான கவிஞர் பே.இராஜேந்திரன் அவர்களுக்கு மகாகவி பாரதியார் மொழிக் காவலர் விருதினை”தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் விஜயராகவன் வழங்கினார். மேலும் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தமிழ் ஆர்வலர்களின் ஊர்வலம் இயக்குநர் முனைவர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!