சிவகாசியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி எட்டு மாவட்டத்திலிருந்து சுமார் 500க்கு மேற்பட்ட மாண, மாணவிகள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சிலம்பாட்ட கழகம் சார்பாக சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தனியார் பள்ளி வளாகத்தில்  மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றன இப்போட்டில் கலந்து கொள்ளுவதற்க்காக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி.நாகர்கோவில் ஆகிய உட்பட 8 மாவட்டத்திலிருந்து சுமார் 500க்கு மேற்பட்ட மாணவ. மாணவிகள் பங்கேற்றனர்.

சீனியர், சப் சீனியர் , ஜுனியர் மற்றும் சப்ஜுனியர் ஆகிய தர வரிசையில் நடைப்பெற்றன 6 வயது முதல் 21 வயது உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. சுருள்வாள், சிலம்பு , கட்டாக், இரட்டை சுருள்வாள் போன்ற போட்டிகள் நடைப்பெற்றன பார்வையாளர்களை அசத்தும் விதமாக மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இப்போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் தேசிய சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளுவார்கள்

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image