வேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வருகை .

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் – 5ம் தேதி நடக்கிறது. அதிமுக சார்பில் ஏ, சி.சண்முகம், திமுக சார்பில் கதிர்ஆனந்த் ஆகியோர் நேரடியாக மோதுகின்றனர்.அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 24-ம் தேதியும் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் 29-ம் தேதியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர்அணி உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 26-ம் தேதியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றன்.அதிமுக சார்பில் 209 நிர்வாகிகளும் திமுக சார்பில் 70 நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்க உள்ளனர்.இதில் அதிமுக சார்பில் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் என்ற பெரும் பட்டாளமே வருகிறது.திமுக சார்பில் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழு வருகின்றது.ஆக நாளை (22ம் தேதி) முதல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…