மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக நத்தம் காவல் நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைப்பு..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் முறையாக அமைக்கப்படாமல் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதால் உடனடியாக சாய்வுதளத்தை மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சீரமைத்து தர வேண்டும் என TARATDAC சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்று (21.07.19) சாய்வுதளம் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் சீரமைப்பு பணி முடிந்து மாற்றுத்தி றனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்யப்பட்டு ள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு நடவ டிக்கை எடுத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், நத்தம் காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர், சார்பு  ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் . செல்வ நாயகம் – மாவட்ட தலைவர். பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..