வேண்டாம் பெயா் கொண்ட மாணவி மாவட்ட துாதராக நியமனம்.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்தால் கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைப்பது வழக்கம். அப்படி வைத்தால், அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கை. இந்த கிராமத்தில் உள்ள அசோகன் – கவுரி என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு மேலும் பெண் குழந்தை வேண்டாம் என்பதற்காக, 3வதாக பிறந்த குழந்தைக்கு ‘வேண்டாம்’ என்று பெயரிட்டனர். தற்போது 19 வயது ஆகும் வேண்டாம், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில், மாணவி வேண்டாம் பயிலும் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்றது. அதில், அவர் உருவாக்கிய தானாகவே இயங்கக்கூடிய கதவின் விளக்கத்தை ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனத்திடம் விளக்கினார். இதைக் கேட்ட ஜப்பான் நிறுவனம் ஒன்று, ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது.இதை அறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாணவி வேண்டாமை அழைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ எனும் திட்டத்தின் சிறப்பு தூதராக அவரை நியமனம் செய்து கவுரவித்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..