கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சிறப்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்ற ஜனநாயக வழி போராட்டம் நடத்துவது சம்பந்தமாக அனைத்து சமூக,சமுதாய மக்கள் கலந்து ஆலோசனை செய்யும் கலந்தாய்வு கூட்டம் மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை வளாகத்தில் இன்று (21/07/2019) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து ஜமாத்தினை சார்ந்த பொதுமக்கள், பல்வேறு சங்க பிரதிநிதிகள், அரைசியல் மற்றும் சமுதாய அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கீழக்கரை செக்கடி பஜார் பகுதியில் இருந்து வர்த்தகர் சங்கம் மற்றம் அனைத்து சமூக அமைப்புகளும் சோ்ந்து பேரணியாக சென்று எதிர்ப்பை தொிவிப்பது என்றும் பின்னர் அதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இக்ககூட்டத்திற்கு குறுகிய கால இடைவெளியில் அழைப்பு வெளியிட்டு இருந்தாலும் கீழக்கரை பொதுமக்கள் மீது அக்கறை கொண்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கதாகும்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..