Home செய்திகள் படகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு

படகுகளை பழுது நீக்க அரசு மானியம் வழங்கக்கோரி நவாஸ் கனி எம்பி., யிடம் மண்டபம் காங்., திமுக., வினர் மனு

by mohan

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, மண்டடபம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக நிலைய அலுவலரிடம் ஆலோசனைகள் கேட்டறிந்தார்.

நவாஸ் கனி எம்பி., யிடம், நகர் தி மு க செயலாளர் டி.ராஜா, மண்டபம் வட்டார காங்கிரஸ் தலைவர் எம் ஜி விஜயரூபன், நகர் தலைவர் ராமராஜ், செயலாளர் செல்வம், பொருளாளர் கே பி ராஜேந்திரன், துணைத் தலைவர் ஷாஜகான், வேதாளை குமாரசாமி, சாத்தக்கோன் வலசை எம்.சுப்பையா ஆகியோர் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த மனு : மண்டபம் ரயில் நிலைய நடைமேடை உயரம் குறைக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில் நிலைய நடைமேடையை அகலப்படுத்த வேண்டும். தொலைதூரம், வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில்கள் புயல், பலத்த காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் போது, பயணிகளின் நலன் கருதி நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதால் இங்கு ஜங்ஷன் ஏற்படுத்த வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். விரைவு , அதி விரைவு ரயில்களுக்கு மண்டபத்தில் நிரந்தர நிறுத்தம் அமைக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்களுக்காக முன் வைத்த கோரிக்கைகள் : 60 வயது கடந்த மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் அல்லது பிழைப்பு ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும், இதர மாநிலங்களில் வழங்கப்படுவது போல், பழுதான படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!