நீதிமன்ற உத்தரவுப்படி வேதாளை மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல்…வழக்கு தொடர்ந்தவர்கள் தேர்தலில் அபார வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், எப்எஸ் ஏ – 2  வேதாளை மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2018 ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு செ.ஹபீப், ந.களஞ்சியம், செ.காளிமுத்து, மு. முகமது அயூப்கான், மு.முஜிபுர் ரஹ்மான், வீ.நாகரத்தினம், செ.சீனி அகமது கபீர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக முடிவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தங்களது விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்ட மு.செல்லச்சாமி (காங்கிரஸ் மூத்த உறுப்பினர்) ச.கோவிந்தன் (வேதாளை ஊராட்சி திமுக கிளை செயலாளர்) சீ.முகமது இப்ராஹிம் ஷா (அதிமுக, முன்னாள் மேல மைப்பு பிரதிநிதி), சமூக ஆர்வலர் சு.முருகேசன் (நடு மனைக்காடு கிளை திமுக செயலாளர்) ஆகியோர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். போட்டியின்றி தேர்வு செய்தாக அறிவிக்கப்பட்ட 7 பேருடன், வழக்கு தொடர்ந்த 4 பேரையும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, 2,229 உறுப்பினர்களில் இறப்பு உள்பட இதர காரணங்களுக்காக 316 உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். எஞ்சிய 1,913 உறுப்பினர்கள் ஒருவருக்கு 7 வாக்குகள் என்ற விதியின் படி 20.7.19ல் தேர்தல் நடந்தது. இதில் 1,065 பேர் மட்டும் வாக்களித்தனர். 848 பேர் வாக்களிக்க முன் வரவில்லை. இராமநாதபுரம் கூட்டுறவு சார் பதிவாளரும், தேர்தல் அலுவலருமான கி.நா.பாலமுருகன் முன்னிலையில், தேர்தல் உதவியாளர்கள் முத்துப்பேட்டை சேதுநகர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அந்தோணி கிரிமினாலி, கடல் முதல்வர் மாரிச்சாமி, கடல் மேற்பார்வையாளர் ம.முருகன் ஆகியோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில்
செல்லச்சாமி – 795,
கோவிந்தன் – 786,
முகம்மது இப்றாம் ஷா – 736,
முருகேசன் – 687
களஞ்சியம் – 328,
ஹபீப் – 311,
காளி முத்து – 308 வாக்குகள் பெற்று 7 பேர் கொண்ட எப்எஸ்ஏ -2 வேதாளை மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலை முறையாக நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த

செல்லச்சாமி – 795,
கோவிந்தன் – 786,
முகம்மது இப்றாம் ஷா – 736,
முருகேசன் – 687 முதல் நான்கு இடங்கள் பெற்றி வென்றனர்.

ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகிய
சீனி அகமது கபீர் – 302,
நாகரெத்தினம் – 281,
முஜிப் ரஹ்மான் – 248,
முகமது அயூப்கான் – 245 ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  வழக்கு தொடர்ந்த முகமது இபுராஹிம் ஷா, கோவிந்தன், செல்லச்சாமி, முருகேசன் ஆகியோர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் வெற்றியால் நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. சங்க நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், எவ்வித முறைகேடுகள் அரங்கேறாமல் நடத்துவோம், என்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..