ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 22 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறினார். இதனை ஏற்காத சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து குடிநீர் பிரச்சினைக்கு சரியான தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து சாலைமறியல் ஈடுபடுவதாக கூறி சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். ஆகவே, ஆயுதபடை காவலர்களை வரவழைத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..