தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்….வீல்சேர் விளையாட்டு வீரர்…. விஜிலென்ஸ் அதிகாரியாக..பாராட்டுவோம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கீழச்செல்வனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர் தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி வீல்ச்சேர் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தன் திறமையை நிரூபிக்க வெளிநாடு எத்தணித்த பொழுது, பொருளாதாரம் தடையாக இருந்த பொழுது தன்னுடைய உடைமைகளை விற்றாவது சாதனை செய்ய துடித்தவர்.  அவரின் முயற்சி வீண் போகா வண்ணம், பல நல்லுள்ளங்களின் ஊக்கத்தினால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்தது, அவருடைய தன்னம்பிக்கையின் அடையாளம். இந்நிகழ்வு சம்பந்தமாக வினோத்பாபு கூறுகையில், “ஆசியா வீல்ச்சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நான் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது .விமானம் ஏறுவதற்கு ஒரு நாள் முன்பாக சத்தியபாதை கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளை மற்றும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை ஆகியவை இணைந்து நிதி உதவி வழங்கின. என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமான சத்திய பாதை அறக்கட்டளை, வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை, என் மனைவி மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், இன்னபிற நலம்விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினர்.

இவருக்கு தற்பொழுது விஜிலன்ஸ் துறையில் பணி கிடைக்கவுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். அவருக்கு இந்த தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாக அவர் கூறினார். விரைவில் இவருக்கு அதற்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சாதனை பற்றி அவர் தன்னம்பிக்கையுடன் தடைகளை கடந்து வந்ததை பற்றி கூறியதாவது, “ நான் பலமுறை பலரால் கைவிடப்பட்டிருக்கிறேன். என்னுடைய மருத்துவப் படிப்பை கூட பொருளாதாரம் இல்லாமையால் பாதியில் கைவிட நேர்ந்தது. இன்று என்னுடைய விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை மூலமாக இந்த நிலையை அடைந்துள்ளேன். இதற்கு முன் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று உள்ளேன் .ஆசிய கோப்பை வீல்ச்சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு சமீபத்தில் வெற்றிபெற்றேன்” என்றார்.

மேலும் இவர் இதற்கு முன்பாக வில் மெடல்ஸ் நிறுவனத்தின் MUGAVAI RECORDS & WILL STATE RECORDS சாதனையாளர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..