வேளாண் மண்டலம் அறிவிக்க ராமநாதபுரத்தில்துண்டு பிரசுரம

காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் ராமநாதபுரம் அண்ணா நகர், சந்தன மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட திமுக., தகவல் தொழில் நுட்ப

பிரிவு துணை அமைப்பாளர் கே.ஜே.பிரவீன் தலைமையில் திமுக., இளைஞரணியினர் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களின் வழங்கினர். காவிரி பாசன பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரும் பேரழிவிற்கு எதிரான பேரியக்க போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..