காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேசத்தில் பாஜக, அரசின் துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்., பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை தடுப்பு காவலில் வைத்த உ.பி., அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரண்மனை வாசல் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி சோ.பா.ரங்கநாதன், அகில இந்திய காங்., கமிட்டி மாநிலக்குழு உறுப்பினர் சாயல்குடி வேலுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் பாரி ராஜன்,மாவட்டதுணைத் தலைவர்கள் பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், கோட்டை முத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணகாந்தி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் மேகநாதன், மணிகண்டன், வட்டாரத் தலைவர் கள் தனசேகர், ராமர், சேசு மனோகரன், பேரஸ் சேவா தள தலைவர் காருகுடி சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், இலக்கிய அணி முருகேசன், சேமனூர் ராஜேந்திரன், தங்கச்சிமடம் முத்துவேல், சிறப்பு பேச்சாளர்கள் கருணாகரன், விஜயன், பரமக்குடி நகர் தலைவர் அப்துல் அஜீஸ், மீனவரணி சகாயராஜ், கலை அணி வலம்புரி, மாவட்ட மகளிரணி தலைவி பெமீலா விஜயக்குமார், செல்லக்கிளி, சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் : கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..