வேலுாா் தோ்தல் செய்திகள்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தம் தலைமையில் வேட்பு மனு பரிசீல னை.வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு

வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அடிப்படை உறுப்பிராக இல்லாமல் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டதால் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

குடியாத்தம் பகுதியில் வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பஸ் நிலையம் மற்றும் சித்தூர் கேட் பகுதி இஸ்லாமிய குடியிருப்பு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்உடன் முகமது ஜான் எம்.பி. ஒன்றிய செயலாளர் ராமு, நகர செயலாளர் பழனி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சட்டமன்றத் தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 22ம் தேதி காலை 10 மணி முதல் வேலூரில் முகாமிட்டு முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

வேலூர் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனு நிறுத்தி வைப்புதேர்தல் நிறுத்த காரணமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ 11- 47 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில் அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் கதிர் ஆனந்த் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்களை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் வேட்புமனுக்களை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..