வறண்டு அடையாளம் மறைந்து வரும் மஞ்சளாறு அணை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிற்கு முதலில் இருந்த பெயர்வெற்றிலைக்குன்று ஆகும். நாளடைவில் மருவி வத்தலக்குண்டு ஆனது.  இங்குவெற்றிலை அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டதால் இங்கிருந்து பல ஊர்களுக்குவெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊரின் அடையாளமாக இருந்த
வெற்றிலைக் கொடிக்கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது ஒரே ஒருவெற்றிலைகை் கொடிக்கால் மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மஞ்சளாறுஅணையில் ஆக்கிரமிப்பு அதிகரித்ததாலும், தூர்வாராததாலும் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் வந்தது போல இப்போது வருவதில்லை. கடந்த
ஐந்தாண்டு காலமாக போதிய மழையும் இல்லாததாலும் ஊரின் அடையாளமாக இருந்தவெற்றிலை விவசாயம் மெல்ல மெல்ல குறைந்து மறைந்து விடும் நிலையில் உள்ளது.மஞ்சளாறு அணையின்மொத்த கொள்ளளவு 57 அடியாகும். 487 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவுஆகும்.  தற்போது மஞ்சளாறு அணையின் 25 அடி உயரத்திற்கு வண்டல் மண்சேர்ந்துள்ளது. இதனால் 100 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்க முடியாமல்வீணாக கடலில் சென்று கலக்கிறது.ஆகையால்  மஞ்சளாறு அணையில் உள்ள வண்டல்மண்ணை தூர்வாற வேண்டும்  வண்டல் மணல் விவசாய நிலங்களுக்கு பயன்படும்
என்பதால் விவசாயிகளை வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள சொன்னால் அணைமுற்றிலும் தூர்வாறப்பட்டுவிடும்.        மஞ்சளாறு அணை தண்ணீா தேங்கி நிற்கும் பகுதியில் ஆண்டுக்கு ஆண்டுஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. மா, தென்னை, சோளம் என்று பல்வேறுபயிர்கள் தண்ணீர் தேங்கும் இடத்தில் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவு குறைகிறது. மேலும் சிலபகுதிகளில் மோட்டார் வைத்து மஞ்சளாறு அணை தண்ணீர் தீர்க்கப்படுகிறது.ஆக்கிரமிப்பு அதிகரிப்பு, தூர்வறாமை, தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால்
ஆ்ணடுக்கு ஆண்டு வத்தலக்குண்டு பகுதியில் உள்ள வீரன்குளம், ஆலங்குளம்பெரியகண்மாய் உள்பட பல கண்மாய்களுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து வரும்தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வருகிறது.  இதனால் வத்தலக்குண்டு பகுதியில்உள்ள கிணறுகள், ஆள்துழை கிணறுகள் அதிகளவில் வற்றி வருகின்றன. தற்போதுஅனைத்து கண்மாய்களும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால்விவசாயம் கேள்விக்குறியாகி குடி தண்ணீருக்கே அலைய வேண்டிய இக்கட்டான நிலைஏற்படும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மஞ்சளாறு அணையில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றவும். தூர்வாறவும், தண்ணீர் திருட்டை தடுக்கவும்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வத்தலக்குண்டு பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..