உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போதிய மழையில்லாததால் விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் வறட்சி மற்றும் விவசாயிகள் குறைகளை தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளிடம் குறைகளை சுட்டிகாட்டி தங்களது பிரச்சனைகளை சரிசெய்வர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் அதனை காரணமாக காட்டி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் விவசாயிகள் அதிகாரிகளை சந்திக்க போனால் அலுவலகத்தில் அலுவலக பணியில் இருப்பதால் சந்திக்காமல் திரும்பி வருகின்றனர். தற்போது விவசாயிகள் உசிலம்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனம் மூலம் சிறுசிறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். அதற்கு போதிய விலையில்லை, மற்றும் செடிகளில் நோய்தாக்குதல் போன்ற குறைகளை அந்த கூட்டத்தில் தான் தெரிவிக்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலூர் தாலுகா, திருமங்கலம் தாலுகா, சோழவந்தான் தாலுகா போன்ற பகுதிகளில் மாதம் 2 முறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..